×

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் விலகினார் ஹாரி புரூக்: லாரன்சுக்கு வாய்ப்பு

லண்டன்: இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து அணியில் இருந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் ஜன.25ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், அபுதாபியில் நடைபெற்று வந்த பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் சொந்த காரணங்களுக்காக இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த 2022ல் டெஸ்ட் அணியில் அறிமுகமான புரூக் இதுவரை 12 டெஸ்டில் விளையாடி 1181 ரன் (அதிகம் 186, சராசரி 62.15, சதம் 4, அரை சதம் 7) விளாசியுள்ளார். சூப்பர் பார்மில் இருக்கும் புரூக் திடீரென விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக நடுவரிசை பேட்ஸ்மேன் டேனியல் வில்லியம் லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று ஐதராபாத் வந்த இங்கிலாந்து அணி வீரர்கள், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

The post இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் விலகினார் ஹாரி புரூக்: லாரன்சுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Harry Brooke ,India ,London ,Harry Brook ,England ,Hyderabad ,Lawrence ,Dinakaran ,
× RELATED புதிய தடுப்பூசிகள் அதிகம்...